அண்மையில், விமான நிலையங்களின் பன்னாட்டுக் குழுவால் வெளியிடப்பட்டுள்ள 2017ஆம் ஆண்டின் விமான நிலைய சேவைக்கானத் தர வரிசைப் பட்டியலில் (Airport Service Quality-ASQ), பயணிகளின் அனுபவத்தின் (Passengers Experience) அடிப்படையில் உலகின் சிறந்த விமான நிலையமாக டெல்லியின் இந்திரா காந்தி விமான நிலையம் (Indira Gandhi International Airport) பட்டியலிடப்பட்டுள்ளது.
பயணிகளுடைய வருகை அதிகரிப்பின் அடிப்படையில் ஷாங்காய் விமானம் நிலையம் மற்றும் பாங்காக் விமான நிலையம் ஆகியவற்றைப் பின்னுக்குத் தள்ளி, 2017 ஆம் ஆண்டு 5 மில்லியன் பயணிகளை டெல்லி விமானம் நிலையம் கையாண்டுள்ளது.
உலகின் 20 முன்னணி பரபரப்பான விமான நிலையங்களுள் ஒன்றாகவும், ஆசியாவின் ஏழாவது பரபரப்பான விமான நிலையமாகவும் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் உள்ளது.
ASQ கணக்கெடுப்பானது விமான நிலையங்களின் தனிச் சிறப்புடைமையினை அளவிடும் உலகின் முக்கிய தர வரிசை அளவீடாகும்.
மேலும் இது விமான நிலையங்களில் பயணிகளின் விமான பயணத் தினத்தன்றே மேற்கொள்ளப்படும் உலகின் ஒரே கணக்கெடுப்பு முறையாகும்.
இந்த கணக்கெடுப்பானது 34 முக்கிய செயல்பாட்டு அளவுருக்களின் மீது பயணிகளுடைய பார்வையை கணக்கிடுகின்றது.