TNPSC Thervupettagam

டெல் உம் அமரின் மடாலயம்

August 2 , 2024 113 days 193 0
  • உலகப் பாரம்பரியக் குழுவானது (WHC) UNESCO அமைப்பின் இரண்டு உலகப் பாரம்பரியத் தளப் பட்டியலிலும் டெல் உம் அமர் எனப்படுகின்ற ஒரு பாலஸ்தீனியத் தளத்தினைச் சேர்க்க முடிவு செய்துள்ளது.
  • ‘புனித ஹிலாரியன் மடாலயம்' என்றும் அழைக்கப்படுகின்ற இது காசா பகுதியில் அமைந்துள்ளது.
  • இந்தப் பண்டைய கிறிஸ்தவ மடாலயம் ஆனது, நான்காம் நூற்றாண்டில் ஹிலாரியன் தி கிரேட் (291-371 கி.பி.) என்பவரால் நிறுவப்பட்டது.
  • அவர் பாலஸ்தீனியத் துறவறத்தின் தந்தை என்று சிலரால் கருதப்படுகிறார்.
  • இந்தத் தலத்தின் இன்றைய தொல்லியல் எச்சங்கள் ஹிலாரியன் காலத்திலிருந்து உமையாத்  காலம் வரையில் சுமார் நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலான காலக் கட்டங்களில் பரவியுள்ளது.
  • UNICEF அமைப்பானது இதனை "புனித பூமியின் முதல் துறவறச் சமூகம்" மற்றும் "சமய, கலாச்சார மற்றும் பொருளாதாரப் பரிமாற்றத்தின் மையம்" என்று குறிப்பிடுகிறது.
  • ஏழாம் நூற்றாண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு புறக்கணிக்கப்பட்டிருந்த இந்த மடாலயம் 1999 ஆம் ஆண்டில் உள்நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்