உலகப் பாரம்பரியக் குழுவானது (WHC) UNESCO அமைப்பின் இரண்டு உலகப் பாரம்பரியத் தளப் பட்டியலிலும் டெல் உம் அமர் எனப்படுகின்ற ஒரு பாலஸ்தீனியத் தளத்தினைச் சேர்க்க முடிவு செய்துள்ளது.
‘புனித ஹிலாரியன் மடாலயம்' என்றும் அழைக்கப்படுகின்ற இது காசா பகுதியில் அமைந்துள்ளது.
இந்தப் பண்டைய கிறிஸ்தவ மடாலயம் ஆனது, நான்காம் நூற்றாண்டில் ஹிலாரியன் தி கிரேட் (291-371 கி.பி.) என்பவரால் நிறுவப்பட்டது.
அவர் பாலஸ்தீனியத் துறவறத்தின் தந்தை என்று சிலரால் கருதப்படுகிறார்.
இந்தத் தலத்தின் இன்றைய தொல்லியல் எச்சங்கள் ஹிலாரியன் காலத்திலிருந்து உமையாத் காலம் வரையில் சுமார் நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலான காலக் கட்டங்களில் பரவியுள்ளது.
UNICEF அமைப்பானது இதனை "புனித பூமியின் முதல் துறவறச் சமூகம்" மற்றும் "சமய, கலாச்சார மற்றும் பொருளாதாரப் பரிமாற்றத்தின் மையம்" என்று குறிப்பிடுகிறது.
ஏழாம் நூற்றாண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு புறக்கணிக்கப்பட்டிருந்த இந்த மடாலயம் 1999 ஆம் ஆண்டில் உள்நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப் பட்டது.