TNPSC Thervupettagam

டெஸ்ட் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இரண்டாவது தென்னாப்பிரிக்க வீரர்

July 31 , 2018 2313 days 662 0
  • டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்ஸில் 9 விக்கெட்களை கைப்பற்றிய இரண்டாவது தென்னாப்பிரிக்க வீரர் கேசவ் மகாராஜ் ஆவார். இவர் தென்னாப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளர் ஆவார்.
  • 1996ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் லான்ஸ் குளுஸ்னர் 64 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இச்சாதனையை கேசவ் மகாராஜ் முறியடித்துள்ளார்.
  • கொழும்புவின் எஸ்எஸ்சி மைதானத்தில் இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் 129 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான ஆட்டத்தை மகாராஜ் வெளிப்படுத்தினார்.
  • 1957ஆம் ஆண்டு ஜோகன்ஸ்பெர்கில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிக்காவின் ஹியுக் தேபீல்டு 113 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒட்டுமொத்தமாக மகாராஜ் இச்சாதனையை எட்டும் 19வது வீரர் ஆவார்.
  • ஜிம் லேக்கர் (10/53) மற்றும் அனில் கும்ப்ளே (10/74) ஆகிய இருவர் மட்டும் டெஸ்ட் போட்டியின் ஒரே இன்னிங்ஸில் பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்