TNPSC Thervupettagam

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலாவது மாற்று வீரர்

August 27 , 2019 1791 days 612 0
  • 2வது ஆஷஸ் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மர்னுஸ் லபூஸ்சக்னே என்பவர் ஸ்டீவ் ஸ்மித்திற்கு ஏற்பட்ட மூளை பாதிப்பின்  காரணமாக அவருக்குப் பதிலாக களமிறங்கும் முதலாவது மாற்று வீரராக உருவெடுத்துள்ளார்.
  • மேலும் இவர் டெஸ்ட் தொடரில் பேட்டிங் செய்யும் முதலாவது மாற்று வீரராகவும் உருவெடுத்துள்ளார்.
  • இது போன்ற ஒரு நடவடிக்கைக்கு சர்வதேசக் கிரிக்கெட் ஆணையம் 2019 ஆம் ஆண்டு ஜூலை அன்று ஒப்புதல் வழங்கியது.

மூளை பாதிப்புப் பற்றி

  • மூளை பாதிப்பானது மூளையின் செயல்பாடுகளைத்  தற்காலிகமாக பாதிக்கின்றது.
  • அறிகுறிகள்: நினைவு இழப்பு, நினைவாற்றல் இழப்பு, தலைவலி, செறிவு அல்லது சமநிலை மற்றும் சிந்திப்பதில் சிரமம், குமட்டல், மங்கலான பார்வை, தூக்கக் கலக்கம் மற்றும் மனநிலை மாற்றங்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்