உளவியல் மற்றும் பொருளாதார ஆராய்ச்சியின் முன்னோடிகளில் ஒருவரான டேனியல் கான்மேன் சமீபத்தில் காலமானார்.
2011 ஆம் ஆண்டில் வெளியான ‘Thinking, Fast and Slow’ என்ற அவரது புத்தகம் ஆனது உளவியல் மற்றும் வணிகப் பிரிவில் அதிகம் விற்பனையாகும் புத்தகங்களில் ஒன்று ஆகும்.
1996 ஆம் ஆண்டில் காலமான கணித உளவியலாளரான அமோஸ் ட்வெர்ஸ்கியுடன் இணைந்து அவர் தனது சில சிறந்தப் படைப்புகளை இயற்றினார்.
மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வு பற்றிய ஆய்விற்கு கான்மேன் கணிசமான அளவிலான பங்களிப்பினையும் ஆற்றியுள்ளார்.
நுகர்வோர் பொருளாதாரத்தின் மீதான அவரது படைப்பிற்காக அவர் நன்கு அறியப் படுகிறார்.
அதற்காக அவருக்கு 2002 ஆம் ஆண்டில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசானது வெர்னான் L ஸ்மித் என்பவருடன் சேர்த்து அளிக்கப் பட்டது.