டேனியல் புயல் ஆனது மத்திய மற்றும் கிழக்கு மத்தியத் தரைக் கடலின் சில பகுதிகளைத் தாக்கியது.
இது லிபியாவில் பேரழிவு தரும் வெள்ளத்தினை உண்டாக்கி மாபெரும் உயிர்ச் சேதங்களுக்கு வழி வகுத்துள்ளது.
இந்தப் புயலால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக லிபியா உள்ள நிலையில் அதனைத் தொடர்ந்து கிரீஸ், துர்கியே மற்றும் பல்கேரியாவிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
இது செப்டம்பர் 05 முதல் 06 ஆம் தேதி வரையில் கிரீஸ் நாட்டில் வரலாறு காணாத மழைப் பொழிவை ஏற்படுத்திய நிலையில் ஜகோரா கிராமத்தில் உள்ள ஒரு இடத்தில் 24 மணி நேரத்தில் 750 மி.மீ. மழை பதிவானது.
இது சுமார் அப்பகுதியில் 18 மாதம் பெய்யும் மழைக்குச் சமமானதாகும்.