TNPSC Thervupettagam
February 19 , 2021 1285 days 690 0
  • ஹீண்டாய் மோட்டார் குழுமமானது நடக்கும் மகிழுந்துவின் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்ட ஒரு இயந்திரத்தை வடிவமைத்துள்ளது.
  • இது “மாற்றம் பெற்ற நுண்ணறிவு கொண்ட நிலத்தின் மீதான பயண இயந்திரம்  என்ற விரிவாக்கத்தைக் கொண்ட “டைகர்” (TIGER - Transforming Intelligent Ground Excursion Robot) என்று அழைக்கப் படுகின்றது.
  • இந்த இயந்திரமானது சவாலான நிலப் பகுதியில் பயணம் செய்யும் திறன் கொண்ட சக்கரங்களைக் கொண்டுள்ளது.
  • அதி செயல்திறன் கொண்ட இந்த இயக்க வாகனமானது நிலை குலைந்தாலோ அல்லது கடினமான நிலப் பகுதியில் பயணம் செய்யத் தேவைப்பட்டாலோ, அதில் நடக்கும் திறன் கொண்டு விளங்குகின்றது.
  • தனை ஆளில்லா விமானத்துடன் இணைக்கப்பட முடியும்.
  • அவசரக் காலங்களில் சரக்குகளை விநியோகம் செய்யவும் வேண்டி இதனைப் பயன்படுத்த முடியும்.
  • பூமியில் மட்டுமல்லாது இதரக் கோள்களிலும் இதனைப் பயன்படுத்த முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்