TNPSC Thervupettagam

டைட்டன் மீதான மீத்தேன் மழைப் பொழிவிற்கான ஆதாரம்

January 17 , 2019 2140 days 638 0
  • விஞ்ஞானிகள் காசினி விண்கலத்திலிருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களைப் பயன்படுத்தி சனிக் கிரகத்தின் மிகப்பெரிய நிலவான டைட்டனின் வடக்கு துருவ முனையில் மீத்தேன் மழைப் பொழிவிற்கான ஆதாரங்களைக் கண்டறிந்திருக்கின்றனர்.
  • இந்த மழைப்பொழிவானது டைட்டன் கிரகத்தின் வடக்கு துருவத்தில் கோடைக் காலத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் முதல் ஆதாரமாக இருக்கும்.
  • அந்நிலவின் வடக்கு துருவத்தின் மீதான கோடைக்கால மழைப்பொழிவின் முதல் கண்டுபிடிப்புகளைப் பிரதிபலிக்கும் நிலப்பரப்பு அடையாளம் காட்டுகின்றது.
  • பூமியின் வருடாந்திர சுழற்சியான நான்கு பருவங்களோடு ஒப்பிடும்போது டைட்டனில் ஒரு பருவம் 7 புவி ஆண்டுகளுக்கு நீடிக்கின்றது.
  • காசினி திட்டம் என்பது நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் இத்தாலிய விண்வெளி நிறுவனம் ஆகியவற்றின் கூட்டுத் திட்டமாகும். இது 1997 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் செலுத்தப்பட்டது.
  • இந்த விண்கலத்தின் நோக்கம் சனிக் கிரகத்தைப் பற்றியும் அதன் அமைப்பு, அதன் வளையங்கள் மற்றும் அதன் இயற்கையான துணைக் கோள்கள் பற்றியும் ஆய்வு செய்வதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்