TNPSC Thervupettagam
June 14 , 2020 1629 days 623 0
  • சனிக் கோளின் நிலவான டைட்டன் ஆனது முன்பை விட வேகமாக சனிக் கிரகத்தை விட்டு விலகிச் செல்கிறது.
  • இதை நாசாவின் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இத்தாலிய விண்வெளி நிறுவன விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
  • இந்தத் தரவு நாசாவின் காசினி விண்கலத்திலிருந்துப் பெறப்பட்டது.
  • காசினி விண்வெளிக்  கலம் அல்லது காசினி-ஹ்யூஜென்ஸ் திட்டம் என்பது நாசா, இத்தாலிய விண்வெளி நிறுவனம் மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆகியவற்றின் ஒரு கூட்டு விண்வெளித் திட்டமாகும்.
  • சனி, அதன் நிலவுகள் மற்றும் அதைச் சுற்றியிருக்கும் வளையங்களைப் ஆராய்வதற்காக இந்தப் பணி தொடங்கப்பட்டது.
  • சனிக் கோளைச் சுமார் 82 நிலவுகள் சுற்றி வருகின்றன.
  • பூமியின் நிலவானது ஒவ்வொரு ஆண்டும் பூமியிலிருந்து 1.5 அங்குலம் என்ற அளவில் அதை விட்டு விலகிச் செல்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்