TNPSC Thervupettagam
January 5 , 2018 2386 days 781 0
  • டைப்பாய்டு காய்ச்சலுக்கு எதிரான டைப்பார் TCV என்றழைக்கப்படும் டைப்பாய்டு இணைத் தடுப்பூசிக்கு (Typhoid Conjugate Vaccine) உலக சுகாதார நிறுவனத்திடமிருந்து முன்தகுதிச் (Pre-qualification) சான்று கிடைத்துள்ளது.
  • ஹைதராபாத்திலுள்ள பாரத உயிர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தால் இத்தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது.
  • டைப்பார் TCV தடுப்பூசியானது முதல் டைப்பாய்டு தடுப்பூசியாகும். 6 வயது முதலான குழந்தைகள் முதல் வயது வந்தோர் வரையிலானவர்களுக்கு இத்தடுப்பூசியைப் பயன்படுத்திட மருத்துவ ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. இது டைப்பாய்டு காய்ச்சலுக்கு எதிராக நீடித்த பாதுகாப்பை அளிக்க வல்லது.
  • WHO விடம் இருந்து முன்-தகுதி சான்றைப் பெற்றுள்ளதன் மூலம் இத்தடுப்பூசிகளின் கொள்முதல் மற்றும் விநியோகத்தை யுனிசெப், அகில அமெரிக்க ஆரோக்கிய அமைப்பு மற்றும் GAVI (Global Alliance for Vaccines and Immunization) தடுப்பூசி கூட்டணியால் ஆதரிக்கப்படும் நாடுகளிடம் மேற்கொள்ள இயலும்.
  • சல்மோனெல்லா டைபி (Salmonella Typhi) எனும் பாக்டீரியத்தால் டைப்பாய்டு காய்ச்சல் உண்டாகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்