TNPSC Thervupettagam

டைம்ஸ் உயர்கல்வி இதழின் உலகப் பல்கலைக்கழக தரவரிசை 2023

October 18 , 2022 641 days 361 0
  • டைம்ஸ் உயர் கல்வி (THE) இதழின் 2023 ஆம் ஆண்டிற்கான தரவரிசையானது சமீபத்தில் வெளியிடப் பட்டது.
  • கல்வி (30%), ஆராய்ச்சி (30%), பாராட்டுகள் (30%), சர்வதேசக் கண்ணோட்டம் (7.5%) மற்றும் தொழில்துறை விளைவு (2.5%) ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவனங்கள் தர வரிசைப் படுத்தப் படுகின்றன.
  • கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில், ஒரு நன்மதிப்புக் கணக்கெடுப்பின் அடிப்படையில் ஒவ்வொன்றிற்கும் 15% மதிப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • தரவரிசையில் இடம் பெற்ற 75 பல்கலைக்கழகங்களுடன் 2023 ஆம் ஆண்டிற்கான தர வரிசையில் இந்தியா ஆறாவது அதிகப் பிரதிநிதித்துவம் பெற்ற நாடாக திகழ்கிறது.
  • இந்தியக் கல்வி நிறுவனங்களில் இந்திய அறிவியல் கழகம் (IISc) முதலிடத்தில் உள்ளது.
  • உலகளவில், இந்திய அறிவியல் கழகம் (IISc) 251-300 என்ற குழுவில் இடம் பெற்றுள்ளது.
  • இந்திய நிறுவனங்களில் இரண்டாவது இடத்தை இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷூலினி உயிரித் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகம் (மொத்தம் 351-400) பெற்றுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டிற்கான தரவரிசையில் இரண்டாவது முன்னணி இந்திய நிறுவனமாக இருந்த ரோபார் இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகமானது 6வது இடத்திற்குச் சரிந்தது.
  • இதில் தமிழ்நாட்டின் அழகப்பா பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்தைப் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்