டைம்ஸ் உயர்கல்விக்கான தரப்பட்டியலில், பொறியியல் மற்றும் கணினி அறிவியல் போன்ற பாடம் சம்பந்தமான தரப் பட்டியலில் உலகில் முதல் 200 நிறுவனங்களில் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனமும், மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனமும் இடம் பெற்றுள்ளன.
உலக அளவில் 89வது இடத்தில் இந்திய அறிவியல் நிறுவனமும், 126-150 என்ற இடப்பிரிவில் இந்திய தொழில்நுட்ப நிறுவனமும் இடம்பிடித்துள்ளன.
இந்த பதிப்பில் அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், மாசாசூட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் கேம்பிரிட்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவை இடம்பிடித்துள்ளன.