TNPSC Thervupettagam

டைம்ஸ் உயர்கல்வி நிறுவனத்தின் பல்கலைக்கழகத் தாக்கம் குறித்த தரவரிசை 2022

May 5 , 2022 807 days 408 0
  • இந்திய நாட்டிலுள்ள அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு உதவி பெறும் பொதுப் பல்கலைக் கழகங்களில் கல்கத்தா பல்கலைக்கழகம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
  • 'சிறப்பான பணி மற்றும் பொருளாதார மேம்பாடு' என்ற துணைப் பிரிவில் இந்தப் பல்கலைக் கழகம் உலகளவில் 14வது இடத்தைப் பெற்றுள்ளது.
  • இந்தியாவிலிருந்து 64 பல்கலைக் கழகங்கள் இந்தத் தரவரிசையில் இடம் பெற்றுள்ள வகையில் இது இந்தியாவை இத்துறையில் நான்காவது சிறந்த நாடாக மாற்றியது.
  • இந்தத் தரவரிசையில் இந்திய நாட்டினைச் சேர்ந்த எட்டு பல்கலைக்கழகங்கள் உலக அளவில் முதல் 300 இடங்களில் இடம் பெற்றுள்ளன.
  • அமிர்த விஷ்வ வித்யாபீடம் பல்கலைக்கழகமானது ஒட்டு மொத்தப் பட்டியலில் 41வது இடத்தையும், 3வது நிலையான மேம்பாட்டு இலக்கு (நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு) மற்றும் 5வது நிலையான மேம்பாட்டு இலக்கு (பாலினச் சமத்துவம்) ஆகியவற்றில் எட்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்