TNPSC Thervupettagam

டைம்ஸ் உயர் கல்வியின் (THE) உலகளாவிய பல்கலைக்கழக தரவரிசை 2019

September 28 , 2018 2155 days 596 0
  • பெங்களுரின் இந்திய அறிவியல் கழகம் (Indian Institute of Scince - IISc) ஆனது 2019 இன் டைம்ஸ் உயர் கல்வி (THE - Times Higher Education) உலகளாவிய பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகமாக (251-30 வரிசையில்) முதலிடத்தில் உள்ளது.
  • ஐஐடி-இந்தூர் (Indian Institute of Technology - IIT) ஆனது (351-400) நாட்டின் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இது இந்த பல்கலைக்கழகத்தை உலகளாவிய சிறந்த 400 பல்கலைகழகங்களின் பட்டியலில் இடம்பெறச் செய்துள்ளது.
  • இதனைத் தொடர்ந்து IIT மும்பை மற்றும் IIT ரூர்கி ஆகியவற்றுடன் கர்நாடகாவில் உள்ள ஜகத்குரு ஸ்ரீ சிவராத்திரீஸ்வரா பல்கலைக்கழகமும் சேர்ந்து நாட்டின் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன.
  • இந்த தரவரிசையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் முதலிடத்தையும் கேம்பிரிட்ஜ் இரண்டாவது இடத்தையும், ஸ்டான்போர்டு மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
  • மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனமானது ஒரு இடம் முன்னேறி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. பட்டியலில் இடம் பிடித்த இந்திய பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை கடந்த
  • ஆண்டின் 42லிருந்து இந்த ஆண்டு 49 ஆக உயர்ந்துள்ளது. இதனால் இந்தியா 5 வது மிகச்சிறந்த பிரதிநிதித்துவ நாடாக அமைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்