டைம்ஸ் உயர் கல்வி இதழின் ஆசிய பல்கலைக்கழகத் தரவரிசை 2022
June 5 , 2022
905 days
411
- டைம்ஸ் உயர் கல்வி (THE) இதழானது 2022 ஆம் ஆண்டிற்கான ஆசியப் பல்கலைக் கழகத் தர வரிசையினை வெளியிட்டது.
- இந்தத் தரவரிசையானது, 31 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 616 பல்கலைக் கழகங்களை உள்ளடக்கியது.
- 71 பல்கலைக் கழகங்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதையடுத்து, இந்தியா அதிக எண்ணிக்கையிலான பல்கலைக் கழகங்கள் இடம் பெற்ற மூன்றாவது நாடாக உள்ளது.
- பெங்களூரு நகரிலுள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனமானது (IISc) 42வது இடத்தினைப் பெற்றுள்ளது.
- அது முதல் 50 இடங்களில் இடம் பிடித்த ஒரே நிறுவனமாக மாறியது.
- மைசூரு நகரிலுள்ள JSS என்ற உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமானது 65வது இடத்தைப் பிடித்துள்ளது.
- ரோபர் நகரிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம் 68வது இடத்திலும், இந்தூர் நகரில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம் 87வது இடத்திலும் உள்ளன.
Post Views:
411