TNPSC Thervupettagam

டைம்ஸ் – 100 மிகவும் செல்வாக்கு மிக்க மனிதர்கள்

April 25 , 2018 2310 days 1371 0
  • 2018-ஆம் ஆண்டின் 100 மிகவும் செல்வாக்குமிக்க மனிதர்கள் பட்டியலை (100 Most Influential People List of 2018) டைம்ஸ் இதழ் (TIME Magazine) வெளியிட்டுள்ளது.
  • 2018 ஆம் ஆண்டிற்கான 100 மிகவும் செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியலில் சுய உழைப்பினால் உயர்ந்த நான்கு இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
  • அவர்களாவன-
    • இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் - விராட்கோலி
    • ஓலா (Ola) நிறுவனத்தின்  துணை நிறுவனர் - பாவிஷ் அகர்வால்
    • மைக்ரேசாப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி - சத்ய நாதெள்ளா.
    • பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன்
  • பாலியல் கொடூரர்களுக்கு (sexual predators) எதிராக போராடும் “Me too” எனும் இயக்கத்தின் (Me Too movement)  நிறுவனரான  தரானா பர்கேவுடைய  (Tarana Burke) பெயரும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பெயரும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
  • அமெரிக்க விண்வெளி வீராங்கனையான (Astronaut)  பெக்கி வின்ஸ்டன் (Peggy Whitson)  பெயரும் இந்த ஆண்டிற்கான டைம்ஸ் செல்வாக்கு மிக்க மனிதர்கள்  பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அவர் அண்மையில் விண்வெளியில் தன்னுடைய 665-வது தினத்தை நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • ­­மேலும் இப்பட்டியலில் இங்கிலாந்து இளவரசரான ஹாரியின் பெயரும் அவருடைய வருங்கால மனைவியான மேகன் மார்க்லே பெயரும் இடம் பெற்றுள்ளது.
  • செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியலில் விளையாட்டுத் துறையில், க்ளோ கிம் (Chloe Kim) பெயர் இடம் பெற்றுள்ளது. இவர் பனிச்சறுக்கு விளையாட்டில்   பல்வேறு  உலகச் சாதனைகளை முறியடித்து  வரும் பனிச்சறுக்கு  வீராங்கனையாவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்