உலக சுகாதார அமைப்பானது எச்ஐவி மருந்தான டொலுட்டிகிராவிர் (dolutegravir - DTG) என்பதனை அனைத்து மக்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை சிகிச்சைக்கு பயன்படுத்தப் பரிந்துரைத்துள்ளது.
இது கர்ப்பிணிப் பெண்களுக்கும் கருத்தரிக்கும் வயதுடைய பெண்களுக்கும் பரிந்துரைக்கப் படுகின்றது.
DTG என்பது டிவிகே என்ற வியாபாரக் குறியீட்டுப் பெயரின் கீழ் விற்கப்படுகின்றது.
இது எச்ஐவி / எய்ட்ஸ் சிகிச்சைக்குப் பிற மருந்துகளுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படும் நச்சுயிரிக்கு எதிரான ஒரு மருந்தாகும்.
DTG ஆனது மாற்று மருந்துகளை விட மிகவும் திறனுள்ள, மிக எளிதில் எடுத்துக் கொள்ளக்கூடிய மற்றும் குறைந்த அளவிலான பக்க விளைவுகளைக் கொண்டுள்ளது.
இந்த மருந்தானது மருந்து எதிர்ப்பை மேம்படுத்துவதற்கு அதிக மரபணுத் தொகுதியைக் கொண்டுள்ளது.