TNPSC Thervupettagam

டோக்கியோ அட்டகாமா ஆய்வகம்

May 25 , 2024 54 days 154 0
  • கடல் மட்டத்திலிருந்து 5,640 மீட்டர் (18,500 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான வானியல் ஆய்வுக் கூடம் தற்போது சிலியின் அடகாமா பாலைவனத்தில் திறக்கப்பட்டுள்ளது.
  • அட்டகாமா பாலைவனத்தில் உள்ள ஒரு மலையின் உச்சியில் அமைக்கப்பட்டு வந்த, டோக்கியோ அட்டகாமா ஆய்வகம் (TAO) ஆனது தற்போது முழுவதுமாக கட்டமைக்கப் பட்டு முழுமையாகச் செயல்பட்டு வருகிறது.
  • TAO ஆய்வகத்தின் தொலைநோக்கி 6.5 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் அகச்சிவப்பு அலை நீளத்தில் பேரண்டத்தினைக் கண்காணிப்பதற்காக என்று வடிவமைக்கப்பட்ட இரண்டு ஆய்வுக் கருவிகளைக் கொண்டுள்ளது.
  • இந்தக் கருவிகளில் ஒன்றான SWIMS என்பது, ஆரம்பகாலப் பேரண்டத்தில் இருந்த அண்டங்களைப் படம் பிடிக்கும்.
  • MIMIZUKU எனப் பெயரிடப்பட்ட இரண்டாவது கருவியானது, தூசிகள் நிறைந்த ஆரம்ப கால வட்டுகளை ஆய்வு செய்வதன் மூலம் முதன்மையான அறிவியல் இலக்கை அடைய உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்