TNPSC Thervupettagam

டோலுடெக்ராவிர் பற்றிய உலக சுகாதார அமைப்பின் அறிக்கை

March 11 , 2024 130 days 216 0
  • உலக சுகாதார அமைப்பின் புதிய அறிக்கையின்படி, HIV நோயாளிகள் மத்தியில் டோலுடெக்ராவிர் எனப்படும் HIV எதிர்ப்பு மருந்து சிகிச்சை மருந்திற்கான எதிர்ப்புத் திறன் அதிகரித்து வருகிறது.
  • 2018 ஆம் ஆண்டு முதல், உலக சுகாதார அமைப்பானது அதன் செயல்திறன், பயன்பாட்டின் எளிமை மற்றும் குறைந்த பக்க விளைவுகள் காரணமாக டோலுடெக்ராவிர் மருந்தினை முன்னுரிமை அடிப்படையில் பயன்படுத்துவதற்கான முதல் மற்றும் இரண்டாம் நிலை நிலை HIV சிகிச்சையாக பரிந்துரைத்துள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில், உலகளவில் HIV பாதிப்புடன் வாழும் 39 மில்லியன் மக்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் HIV சிகிச்சையைப் பெற்றுள்ளனர்.
  • 2022 ஆம் ஆண்டில் 1.3 மில்லியன் புதிய HIV தொற்றுகளும், 630,000 HIV தொடர்பான உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்