TNPSC Thervupettagam

ட்விஸ்ட் நடவடிக்கை

December 23 , 2019 1802 days 711 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது ஒரே நேரத்தில் அரசுப் பத்திரங்களை வாங்குதல் (2029 ஆம் ஆண்டில் முதிர்ச்சியடையக் கூடிய அரசுப் பத்திரங்கள்) மற்றும் விற்பனை செய்தல் (2020 ஆம் ஆண்டில் முதிர்ச்சியடையக் கூடிய குறுகிய காலப் பத்திரங்கள்) போன்றவற்றின் மூலம் தலா 10,000 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசுப் பத்திரங்களை அதன் திறந்த சந்தை நடவடிக்கைகளின் மூலம் பெற இருக்கின்றது.
  • இது இலாபத்தை நிர்வகிப்பதையும் நீண்ட காலக் கடன் வாங்குவதை மலிவானதாக்குவதையும் இலக்காகக் கொண்டுள்ள ஒரு நடவடிக்கையாகும்.
  • ரிசர்வ் வங்கியானது நீண்ட காலப் பத்திரங்களை வாங்குவதனால், அவற்றுக்கான தேவை அதிகரிப்பானது நீண்ட கால இலாபத்தைக் குறைக்க வழிவகுக்கின்றது.
  • இதன் நீண்ட கால வட்டி விகிதங்களானவை பொருளாதார முதலீடு மற்றும் வளர்ச்சிக்கு முக்கியமானதாக உள்ளன.
  • குறுகிய கால விகிதங்கள் அதிகரிக்கப்படுவதாலும் நீண்ட கால விகிதங்கள் குறைக்கப்படுவதாலும் இதன் இலாப வளைவு “மாறுபட்டதாக” மாறுகின்றது.
  • வட்டி விகிதங்களைக் குறைத்த போதிலும், நீண்ட கால முதலீட்டிற்கான வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும்போது மத்திய வங்கிகள் இந்த நடவடிக்கையைத் தேர்வு செய்கின்றன.
  • திறந்த சந்தை செயல்பாடுகள் (Open Market Operations - OMO) என்பது பொருளாதாரத்தில் பண விநியோகத்தைக் கட்டுப்படுத்த ஒரு நாட்டின் மத்திய வங்கியால் பயன்படுத்தப்படும் பணவியல் கொள்கைக் கருவிகளில் ஒன்றாகும் (மொத்த பணத்தின் அளவைக் கட்டுப்படுத்த அல்லது ஒழுங்குபடுத்துவதற்குப் பயன்படும்).
  • OMOகளானவை ரிசர்வ் வங்கியினால் பணம் வழங்கல் நிலைமைகளை சரி செய்வதற்காக அரசாங்கப் பத்திரங்களை விற்பனை செய்வதன் மூலம் அல்லது வாங்குவதன் மூலம் நடத்தப்படுகின்றன.

OT பற்றி

  • நீண்ட காலப் பத்திரங்களை வாங்குதல் மற்றும் குறுகிய காலப் பத்திரங்களை விற்பனை செய்வதற்கான இந்த நடவடிக்கையானது ட்விஸ்ட் நடவடிக்கை (Operation Twist - OT) என்று அழைக்கப்படுகின்றது.
  • அமெரிக்கா இரண்டு முறை OTஐ அறிவித்துள்ளது.  1961 ஆம் ஆண்டில் ஜான் எஃப் கென்னடியின் ஆட்சியின் போது முதல் முறையாகவும், 2011 ஆம் ஆண்டில் ஒபாமாவின் ஆட்சியின் போது இரண்டாவது முறையாகவும் அறிவித்துள்ளது.
  • ஜப்பான் தனது சொந்த OT பதிப்பினை “தர மற்றும் அளவுருக்களின் அடிப்படையில் எளிமைபடுத்தும் நடவடிக்கை” (Qualitative and Quantitative Easing - QQE) என்று 2013 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்