மத்திய அரசாலும் சில மாநில அரசுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட செயல்முறையைப் போல RTI விண்ணப்பங்களை ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான அமைப்புகளை கட்டாயமாக அமல்படுத்த வேண்டுமென தமிழக அரசிற்கு மாநில தகவல் ஆணையமானது பரிந்துரைத்துள்ளது.
மாநில தகவல் ஆணையமானது இரண்டாம் நிலையில் உள்ள ஒரு முறையீட்டு ஆணையமாகும். மேலும் இது ஒரு பகுதியளவில் நீதித் துறையைச் சார்ந்த அமைப்பாகும்
இது விண்ணப்பதாரர் மற்றும் அரசின் துறைகளுக்கிடையேயான RTI தொடர்பான விவகாரங்களுக்கு தீர்ப்பளிக்கின்றது.
RTI சட்டத்தின்படி மாநில தகவல் ஆணையத்திற்கு அரசிடம் பரிந்துரையளிக்கும் அதிகாரம் உண்டு என்ற போதிலும் அது அரசைக் கட்டுப்படுத்தாது.
RTI சட்டத்தின் பிரிவு 4(1)(b)-ன் கீழ் அதன் வலைதளத்தில் தகவல்களை நிகழ்நிலைப்படுத்த ஒவ்வொரு துறையிலும் ஒரு அனுமதியளிப்பு அதிகாரியை நியமிக்கவும் இது பரிந்துரை செய்துள்ளது.
மேலும் இது மாணவர்கள் தங்களது விடைத் தாள்களை பெறுவதற்கான அடிப்படை உரிமையானது RTI குறிப்புரையின் கீழ் உள்ளது எனவும் கூறியுள்ளது.