இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கான தகவல் இணைவு மையத்தை ஹரியானாவின் குருகிராமில் உள்ள தகவல் மேலாண்மை மற்றும் பகுப்பாய்வு மையத்தில் (Information Management and Analysis Centre-IMAC) மத்திய பாதுகாப்பு அமைச்சர் தொடங்கி வைத்தார்.
இதன்மூலம் இப்பகுதியில் கடல்வழி ஆதிக்க வரம்பு குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக ‘வணிக கப்பல்கள்’ பற்றிய தகவல்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகளுடன் பரிமாறப்படும்.
IMAC என்பது கடலோர கண்காணிப்பு அல்லது ரேடார் இணைப்புகளை இணைத்து கிட்டத்தட்ட 7500 கி.மீ. நீளமுடைய கடலோர பகுதியின் தடையற்ற நிகழ்நேர கண்காணிப்பை உருவாக்குகின்ற ஒரு முதன்மையான ஒருமுனை மையமாகும்.