TNPSC Thervupettagam

தகவல் மற்றும் விளம்பரத் துறை அறிவிப்புகள்

September 14 , 2021 1075 days 463 0
  • தகவல் மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் M.P. சாமிநாதன் தமிழக சட்டப் பேரவையில் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
  • பத்திரிக்கையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என அவர் அறிவித்தார்.
  • அடித்தட்டு மக்களின் மேம்பாட்டிற்காக பங்காற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருதானது வழங்கப்படும்.
  • நோபல் பரிசு பெற்ற ரபிந்திரநாத் தாகூர் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் A.P.J. அப்துல்கலாம் ஆகியோரின் உருவச்சிலைகள் முறையே சென்னையிலுள்ள புகழ் மிக்க ராணி மேரிக் கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நிறுவப்படும்.
  • அப்துல்கலாம் அவர்கள் 2002 ஆம் ஆண்டு ராஷ்டிரபதி பவன் செல்வதற்கு முன்பாக அண்ணா பல்கலைக் கழகத்தின் விடுதியில் தங்கியிருந்து கல்லூரி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியது குறிப்பிடத் தக்கதாகும்.
  • சென்னையிலுள்ள கிண்டியில் அமைந்துள்ள காந்தி மண்டபத்தில் விடுதலைப் போராட்ட வீரர்கள் வீரபாண்டியக் கட்டபொம்மன் மற்றும் மருது சகோதரர்களின் உருவச் சிலைகள் நிறுவப்படும்.
  • கடலூர் மற்றும் அரியலூர் ஆகிய இடங்களில் முறையே அஞ்சலை அம்மாள் மற்றும் கீழப்பழுவூர் சின்னசாமி ஆகியோரின் சிலைகள் நிறுவப்படும்.
  • C.N. அண்ணாதுரை, மு, கருணாநிதி, M.G. ராமச்சந்திரன் மற்றும் J. ஜெயலலிதா ஆகியோரின் அமைச்சரவையில் பணியாற்றிய திராவிடப் போராளியான V.R. நெடுஞ் செழியன் அவர்களின் நினைவாக சேப்பாக்கத்திலுள்ள அரசு விருந்தினர் மாளிகையில் அவருக்குச் சிலை நிறுவப்படும்.
  • டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் ராமாமிர்தம், மற்றும் டாக்டர் மு. வரதராசனார் ஆகியோரின் நினைவாக அவர்களது உருவச்சிலைகள் முறையே புதுக்கோட்டை, மயிலாடுதுறை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நிறுவப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்