உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக, மணிப்பூர் மாநில அமைச்சரான தொனுவோஜாம் சியாம்குமார் என்பவரை அம்மாநில அமைச்சரவையிலிருந்து உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது.
மேலும் இந்திய உச்சநீதிமன்றமானது இவரை அம்மாநில சட்டசபைக்குள் நுழையவும் தடை விதித்துள்ளது.
பின்னணி
சியாம் குமார் என்பவர் 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற மணிப்பூர் மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்அம்மாநில நகரத் திட்டமிடல், வனம் மற்றும் சுற்றுச்சுழல் அமைச்சராகப் பொறுப்பேற்பதற்காக பாஜக கட்சியில் இணைந்தார்.
அம்மாநிலத்தின் மற்ற சட்டமன்ற உறுப்பினர்களால் இவரைத் தகுதி நீக்கம் செய்யக் கோரப்பட்ட மனுக்கள் 2017 ஆம் ஆண்டு முதல் அம்மாநில சட்டமன்ற சபாநாயகரிடம் நிலுவையில் இருந்து வருகின்றது.
இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் முறையிடப்பட்ட போது, இந்திய உச்சநீதிமன்றம் சரத்து 142ஐப் பயன்படுத்தி அம்மாநில அமைச்சரவையிலிருந்து (கேபினேட்) இவரை நீக்கியது.
சரத்து 212ன்படி, உச்சநீதிமன்றம் உள்பட இந்தியாவில் உள்ள எந்தவொரு நீதிமன்றமும் மாநில சட்டமன்றத்தின் உள் விவகாரங்களில் தலையிட முடியாது.
இந்திய உச்சநீதிமன்றமானது சரத்து 142ஐப் பயன்படுத்தி தனது கீழ் உள்ள விவகாரங்களில் “முழுமையானநீதியை” நிலைநாட்டுவதற்காக ஒர் உத்தரவைப்பிறப்பிக்கலாம்.