புனேவில் உள்ள இந்திய அறிவியல் கல்விக் கழகத்தினைச் சேர்ந்த சில அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், மின்னணுக் கழிவுகளிலிருந்து தங்கத்தை மிக எளிதாகப் பிரித்து எடுக்கும் திறன் கொண்ட ஒரு புதிய கலப்பின புரைமக் கூழ்மத்தினை உருவாக்கி உள்ளனர்.
ஆபத்தானச் சுரங்க நடைமுறையின் பயன்பாட்டினைக் குறைப்பதோடு, மின்னணுக் கழிவு மேலாண்மையை நிவர்த்தி செய்வதிலும் இது பயனுள்ளதாக இருக்கும்.
பகல் நேரத்தில், இந்தக் கலப்பின கூழ்மம் ஆனது, கிராமிற்கு சுமார் 1689 மில்லி கிராம் அளவிலான மின்னணுக் கழிவுகளையும், உயர் ஆற்றல் கொண்ட புலப்படும் ஒளியில் கிராமிற்கு 2349 மில்லி கிராம் மின்னணுக் கழிவுகளையும் பிரித்தெடுக்கும்.
உலகளாவிய மின்னணுக் கழிவுகளில் இந்தியாவின் பங்கு சுமார் 6.4 சதவீதம் மட்டுமே என்றாலும், சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் மின்னணுக் கழிவு உற்பத்தி அதி வேகமாக அதிகரித்து வருகிறது.
2020 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், மின்னணுக் கழிவு உற்பத்தி 131 சதவீதம் அதிகரித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு உலகளாவிய மின்னணுக் கழிவு கண்காணிப்பு அறிக்கையானது, இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் இந்தியாவில் மின்னணுக் கழிவுகள் 9.2 மில்லியன் டன்னிலிருந்து 74.7 மில்லியன் டன்னாக அதிகரிக்கும் என்று கணித்துள்ளது.