முதன்முறையாக, ஓர் அணு அளவிலான தடிமன் கொண்ட தங்கத் தகடினை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
இது தங்கத்தினை இரு பரிமாணத் தகடாக முதல் உலோகமாக உருவாக்குகிறது என்ற வகையில் இது எதிர்காலத்திற்கான சில சாத்தியக் கூறுகளை வெளிக்கொணர்வதற்கு உதவும்.
இது போன்ற இரு பரிமாணப் பொருட்கள் இதற்கு முன் உருவாக்கப்படவில்லை.
2004 ஆம் ஆண்டு கார்பனால் ஆன அணு அளவிலான மெல்லிய பொருளான கிராபெனின் உருவாக்கத்திலிருந்து, அறிவியலாளர்கள் நூற்றுக்கணக்கான இரு பரிமாணப் பொருட்களைக் கண்டறிந்துள்ளனர்.