2021 ஆம் ஆண்டில் சட்டவிரோதமாக வீடுகள் இடிக்கப்பட்ட ஐந்து பேருக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் (2021 ஆம் ஆண்டு ஜுல்பிகர் ஹைதர் எதிர் உத்தரப் பிரதேச மாநில அரசு என்ற வழக்கில்) உத்தரவிட்டுள்ளது.
தங்குமிடம் (வீடு) உரிமை என்பது ஓர் அடிப்படை உரிமை என்றும் அரசியலமைப்பின் 21வது பிரிவின் ஒருங்கிணைந்த அங்கம் அது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.
விதி மீறல்கள் பற்றிய மிகத் தெளிவானக் குறிப்புடன், கட்டாய 15 நாட்கள் முன் அறிவிப்பு மற்றும் குடியிருப்பாளர்கள் வீடுகளின் இடிப்பு உத்தரவுகளை எதிர்த்து வழக்குத் தொடர மிக ஒரு நியாயமான வாய்ப்பினையும் இது மீண்டும் உறுதி செய்து உள்ளது.