கடந்த பருவத்தை ஐரோப்பாவின் அதிக கோல் அடித்த வீரராக முடித்து 5வது முறையாக தங்க காலணி விருதினை லியோனல் மெஸ்ஸி பெற்றுள்ளார்.
இவர் பார்சிலோனா அணிக்கான 68 ஆட்டங்களில் 34 கோல்களை அடித்து லிவர்பூல் அணியின் மொகமது சலா மற்றும் டொட்டன்ஹாம் அணியின் ஹாரிகான் ஆகியோரை விட முன்னிலை பெற்றார்.
ரியல் மாட்ரிட் அணிக்காக 52 ஆட்டங்களில் 26 கோல்களை அடித்து 4 முறை கிறிஸ்டியானா ரொனால்டோ இவ்விருதைப் பெற்றுள்ளார்.