இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆனது, ஐக்கியப் பேரரசில் இருந்து இந்தியாவில் உள்ள அதன் காப்புப் பெட்டகங்களுக்கு தோராயமாக 100 டன் (1 லட்சம் கிலோகிராம்) தங்கத்தைக் கொண்டு வந்துள்ளது.
1991 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியா இவ்வளவு பெரிய அளவிலான தங்கக் கையிருப்புப் பரிமாற்றத்தினை மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
இந்திய ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பில் பாதிக்கும் மேற்பட்டவை, வெளி நாடுகளில் பாங்க் ஆஃப் இங்கிலாந்து மற்றும் பேங்க் ஆஃப் இன்டர்நேஷனல் செட்டில் மென்ட் ஆகியவற்றில் பாதுகாப்பான பெட்டகங்களில் உள்ளன.
தோராயமாக மூன்றில் ஒரு பங்கு உள்நாட்டில் சேமிக்கப் படுகிறது.
2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியன்று நிலவரப்படி, மத்திய வங்கி அதன் அந்நியச் செலாவணி கையிருப்பின் ஒரு பகுதியாக 822.10 டன் தங்க கையிருப்பினை கொண்டு உள்ளது.
இந்தியா தற்போது, தனது தங்கக் கையிருப்பின் பெரும்பகுதியை அதன் சொந்தப் பெட்டகங்களில் வைத்திருக்கும்.