ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டின் புகழ்பெற்ற சர்வதேச தங்க நகர வாயில் சுற்றுலா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் “தொலைக்காட்சி சினிமாப் பிரிவில்” இந்திய அரசின் மத்திய சுற்றுலாத் துறை முதல் பரிசை வென்றுள்ளது.
இந்த விருதுகள் வியக்கத்தகு இந்தியா 2.0 பிரச்சாரத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட பின்வரும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி வணிக விளம்பரங்களுக்காக வழங்கப்பட்டன.
ரேஸ்டிராக்கின் யோகி
திரு மற்றும் திருமதி ஜோன்ஸின் மறுபிறப்பு
பாரீசில் உள்ள சரணாலயம்
மன்ஹட்டானின் மகாராணி மற்றும்
மசாலா சமையல் வல்லுநர்
வியக்கத்தகு இந்தியா 2.0 பிரச்சாரமானது மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகத்தினால் 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்டது.