TNPSC Thervupettagam

தங்க விசா திட்டம் - ஐக்கிய இராஜ்ஜியம்

December 13 , 2018 2176 days 648 0
  • பண மோசடி மற்றும் முறைப்படுத்தப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, ஒன்றாவது நிலையிலான (முதலீட்டாளர்) விசாக்களை ஐக்கிய இராஜ்ஜியம் ரத்து செய்திருக்கின்றது.
  • 2019 ஆம் ஆண்டில் புதிய பாதுகாப்பு விதிகளை உருவாக்கும் வரை இந்த விசாத் திட்டம் நடைமுறையில் இருக்கும்.
  • “தங்க விசா” என்றழைக்கப்படும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் ஒன்றாவது நிலையிலான முதலீட்டாளர் விசாவானது 2008 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
  • இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த உயர் மதிப்பு கொண்ட செல்வ வளம் மிக்க தனி நபர்கள் ஐக்கிய இராஜ்ஜியத்தில் நிரந்தரக் குடியுரிமையைப் பெறுதவற்கு சாதகமான வழி இதுவாகும்.
தங்க விசாவுக்கான விதிமுறைகள்
  • தங்க விசாவைப் பெறுவதற்கு, அயல்நாட்டைச் சேர்ந்தவர் குறைந்த பட்சம் £2 மில்லியன் (£ - பவுண்டு) தொகையை (ஏறத்தாழ $2.5 மில்லியன்) கண்டிப்பாக பிரிட்டனில் முதலீடு செய்ய வேண்டும்.
  • இவ்வாறு முதலீடு செய்வதன் மூலம் ஐக்கிய இராஜ்ஜியப் பத்திரங்கள், பங்கு மூலதனங்கள் அல்லது நிறுவனங்கள் 5 வருடங்களுக்குள் நிரந்தரக் குடியுரிமையைப் பெறுவதற்கு முதலீட்டாளர்களை விண்ணப்பிக்க அனுமதிக்கும்.
  • £5 மில்லியன் முதலீடு செய்பவர்கள் 3 ஆண்டுகள் கழித்து நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்.
  • £10 மில்லியன் முதலீடு செய்பவர்கள் 2 ஆண்டுகள் கழித்து நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்