தடிப்புத் தோல் அழற்சி நோய்க்கான சிகிச்சைக்கு எஸ்ட்ராடியோல் பயன்பாடு
July 2 , 2022 881 days 415 0
பெண்களின் உடலில் உள்ள எஸ்ட்ராடியோல் ஹார்மோன் தடிப்புத் தோல் அழற்சியை கட்டுப்படுத்துகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது சொறி மற்றும் அரிப்புக்கு வழி வகுக்கும் ஒரு தோல் நோயாகும்.
பெண்களின் உடலில் இந்த ஹார்மோன் இருப்பதால், ஆண்களுடன் ஒப்பிடும்போது, பெண்களுக்கு தீவிரமான தடிப்புத் தோல் அழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு கணிசமான அளவில் குறைவாக உள்ளது.
எஸ்ட்ராடியோல் அல்லது ஆய்ஸ்ட்ராடியோல் என்பது பெண்களின் உடலில் உள்ள பாலின ஹார்மோன் ஈஸ்ட்ரோஜனின் ஒரு வடிவமாகும்.
17-பீட்டா-எஸ்ட்ராடியோல் என்றும் அழைக்கப்படுகின்ற இந்த எஸ்ட்ராடியோல் ஒரு ஈஸ்ட்ரோஜன் ஸ்டீராய்டு ஹார்மோன் ஆகும்.