TNPSC Thervupettagam

தட்டம்மைத் தடுப்பூசிகள்

January 27 , 2020 1672 days 718 0
  • அண்மையில் மாலத்தீவில் அம்மை நோய் பரவுவதை சமாளிப்பதற்காக அந்நாட்டிற்கு உதவுவதற்கு இந்தியா முன்வந்துள்ளது.
  • சமீபத்தில் மாலேயில் உள்ள இந்தியத் தூதரகமானது 30,000 அளவு கொண்ட தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசிகளை மாலத்தீவு சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைத்து உள்ளது.
  • உலக சுகாதார நிறுவனமானது “மாலத்தீவு - அம்மை நோய் இல்லாத நாடு” என்று அறிவித்த மூன்று ஆண்டுகளுக்குள் இந்த நோய்ப் பரவல் மீண்டும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • உலகளாவியத் தடுப்பூசி செயல் திட்டத்தின் கீழ், தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோயானது 2020 ஆம் ஆண்டுக்குள் ஐந்து உலக சுகாதார நிறுவனப் பிராந்தியங்களில் அகற்றப்படுவதை இலக்காகக் கொண்டுள்ளது.
  • தட்டம்மையானது ஒரு வைரஸ் தொற்று நோயாகும்.
  • பாதிக்கப்பட்ட நபர்களின் மூக்கு, வாய் அல்லது தொண்டையில் இருந்து வெளிப்படும் நீர்த்துளிகள் வழியாக இந்தத் தட்டம்மை பரவுகின்றது.
  • ஜெர்மன் தட்டம்மை என்றும் அழைக்கப்படுகின்ற ரூபெல்லா தொற்றுநோயானது, பொதுவாக ஒரு லேசான வைரஸ் தொற்று ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்