அரிசோனாவில் உள்ள புனித ஹோப்பி தளத்திற்கு ICOMOS அமைப்பின் தண்ணீர் மற்றும் பாரம்பரியக் கேடயம் (Water and Heritage Shield) ஆனது வழங்கப் பட்டுள்ளது.
சிபாபு என்பது சுண்ணாம்புக் கல்லால் ஆன பாறைகளாலான முகடு மற்றும் லிட்டில் கொலராடோ ஆற்றில் அமைந்துள்ள ஒரு நீரூற்று ஆகும்.
ஹோப்பி, நவாஜோ மற்றும் ஜூனி பழங்குடியினருக்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
நினைவுச் சின்னங்கள் மற்றும் தளங்களுக்கான ஒரு சர்வதேசக் குழுவின் சர்வதேச அறிவியல் குழுவால் இது வழங்கப்பட்டது.
உலகெங்கிலும் உள்ள தண்ணீர் சார்ந்த மற்றும் பூர்வீகப் புனிதத் தலங்களின் முக்கியத்துவம், கலாச்சாரம் மற்றும் வரலாற்று நினைவுச் சேமிப்பு ஆகியவை தொடர்பான உரிமையை பொதுமக்கள் அறிந்து கொள்ள உதவுவதே இந்தக் கேடயம் வழங்கப் படுவதன் ஒரு நோக்கமாகும்.