தத்தெடுக்கப்பட்ட ஒரு நபரின் உயிரியல் (இரத்தப் பந்த ரீதி) பூர்வ உறவினர்களை, அவரைத் தத்தெடுத்த குடும்பத்திலிருந்து அவர் பெற்ற சொத்துக்களுக்கு உரிமை கோருவதற்காக அவரது சட்டப்பூர்வ வாரிசுகளாக கருத முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1956 ஆம் ஆண்டு இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டத்தின்படி தத்தெடுப்பு சார்ந்த விதிகள் நிர்வகிக்கப்படுகின்றன.
ஒருவர் மற்றொரு குடும்பத்தினால் தத்தெடுக்கப்படும் நாளில் உயிரியல் பூர்வ குடும்பத்துடனான அனைத்து உறவுகளும் துண்டிக்கப்படும்.
எனவே, அவரது/அவளுடைய இரத்த சம்பந்தப்பட்ட உறவினர்கள் அவர் இறந்த பிறகு சட்டப் பூர்வ வாரிசுரிமைச் சான்றிதழைப் பெற முடியாது.