TNPSC Thervupettagam

தனிச்சுழி வெப்பநிலை கொண்ட அணுக்களின் வரைபடமாக்கல்

February 15 , 2024 284 days 323 0
  • பெங்களூருவின் இராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் (RRI) இந்திய அறிவியலாளர்கள் ஒரு புதிய படத் திருத்த வழிமுறையை வடிவமைத்துள்ளனர்.
  • இது தனிச்சுழி வெப்பநிலை கொண்ட அணுக்கள் பற்றிய ஒரு ஆய்வை கணிசமாக மேம்படுத்துகிறது.
  • இது தனிச்சுழி வெப்பநிலை கொண்ட அணுக்களைப் பயன்படுத்தி ஆய்வுகளின் போது எடுக்கப்பட்ட படங்களின் தெளிவை மேம்படுத்துகிறது.
  • இந்தப் புதிய வழிமுறை ஆனது தேவையற்ற கருமையான மற்றும் பிரகாசமான வடிவங்களைக் கொண்ட, முக்கியமான தரவை மறைக்கும் குறுக்கீட்டுப் பட்டை வரிகளை 50 சதவிகிதம் வரை குறைக்கிறது.
  • எண், வெப்பநிலை மற்றும் இயக்கவியல் போன்ற முக்கிய அணு அளவுருக்களை குறுகிய நேர அளவீடுகளில் தீர்மானிக்கும் போது இந்த பட்டை வரிகள் துல்லியமற்ற தன்மைக்கு வழிவகுக்கும்.
  • இந்தத் தனிச்சுழி வெப்பநிலை கொண்ட அணுக்களை ஆய்வு செய்ய, ஆராய்ச்சியாளர்கள் பொதுவாக காந்த-ஒளியியல் பொறிகள் மற்றும் உயர் ஆற்றல் கொண்ட சீரொளி குளிரூட்டும் நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்