அடல் மேம்படுத்துதல் ஆய்வகங்கள் என்பது ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்கள் தங்கள் புத்தாக்க திறன்களை வளர்த்துக் கொள்ளவும், புதிய கருத்துகளை மேம்படுத்திக்கொள்ளவும் உருவாக்கப்பட்ட ஆய்வகங்கள் ஆகும்.
முப்பரிமான அச்சுப்பொறிகள்(3D printers) , ரோபாட்டிக்ஸ் மற்றும் மின்னணு மேம்பாட்டுக் கருவிகள் போன்ற அதிநவீனவசதிகளுடன் இந்த ஆய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது.