தமிழ்நாட்டில் விரைவில் இயக்கப் படவிருக்கும் அனைத்து 525 மின்சாரப் பேருந்துகளும் ஒரு தனியார் ஒப்பந்ததாரரால் சொந்தமாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட இருக்கின்றது.
அவை மாநிலப் போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படாது.
இனிமேல் மாநில அரசால் நேரடியான கொள்முதல் இருக்காது.
அதற்குப் பதிலாக ஒரு மொத்த மதிப்பு ஒப்பந்தம் மாநிலப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் இறுதியாக ஏலமெடுத்த ஒப்பந்ததாரருக்கும் இடையே கையெழுத்திடப்படும்.
கலப்பு மற்றும் மின்சார வாகனங்களின் துரித உற்பத்தி மற்றும் ஏற்பு – II (Faster Adoption and Manufacturing of Hybrid and Electric Vehicles II – FAME II) என்ற திட்டமானது மாநிலப் போக்குவரத்துக் கழகத்திற்கும் இறுதியாக ஏலமெடுத்த ஒப்பந்ததாரருக்கும் இடையே ஒரு மொத்த மதிப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட வேண்டுமென கூறுகின்றது.
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் உள்பட தமிழ்நாடானது எட்டு மாநிலப் போக்குவரத்துக் கழகங்களைக் கொண்டிருக்கின்றது.
மின்சாரப் பேருந்துகளுக்கான இயக்கச் செலவு டீசல் பேருந்துகளை விட மிக குறைவான ஒன்றாக இருக்கின்றது. ஆற்றல் நுகர்வுச் செலவு டீசல் பேருந்துகளுக்கு கிலோ மீட்டருக்கு 25 ரூபாய் என்றும் மின்சாரப் பேருந்துகளுக்கு கிலோ மீட்டருக்கு 7 ரூபாய் என்றும் இருக்கின்றது.