தனியார் சமபங்கு-துணிகர மூலதன (PE-VC) நிறுவனங்கள் ஆனது, 2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனங்களில் 14 ஒப்பந்தங்கள் மூலம் சுமார் 1,108 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளன.
2024 ஆம் ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடச் செய்யும் போது இது மிகப்பெரிய அதிகரிப்பு ஆகும்.
2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், முதலீடுகளின் அடிப்படையில் மிக அதிகபட்ச முன்னேற்றம் பதிவானது.
தேசிய அளவில், PE-VC நிறுவனங்கள் 2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இந்திய நிறுவனங்களில் 270 ஒப்பந்தங்களில் 7.9 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடுகளை மேற்கொண்டன.
இந்த முதலீட்டுத் தொகையானது, 2024 ஆம் ஆண்டில் இதே காலக் கட்டத்தில் முதலீடு செய்யப் பட்ட சுமார் 7.3 பில்லியன் டாலர்களை விட (264 ஒப்பந்தங்களில்) சுமார் 8% அதிகரிப்பைக் குறிக்கிறது.