TNPSC Thervupettagam

தனியார் துறையில் உள்ளூர் மக்களுக்குப் பணி ஒதுக்கீடு – ஹரியானா

March 6 , 2021 1269 days 608 0
  • ஹரியானா மாநில ஆளுநரான சத்யதேவ் நரைன் ஆர்யா அவர்கள் அம்மாநிலத்தில்  வேலை தேடுபவர்களுக்காக தனியார் துறையில் 75% இடஒதுக்கீட்டை வழங்க வழி வகை செய்யும் ஒரு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
  • ஹரியானா மாநில உள்ளூர் மக்களின் வேலை குறித்த மசோதா – 2020 ஆனது ஒரு மாதத்தில் 50000 ரூபாயிற்கும் குறைவான ஊதியத்துடன் தனியார் துறை பணியில் உள்ளூர் மக்களுக்கான இடஒதுக்கீட்டை அளிக்கின்றது.
  • ஒரு குறிப்பிட்ட நிறுவனம் அமைந்துள்ள மாவட்டத்திலிருந்து 10% பணியாளர்களை மட்டுமே அந்நிறுவனம் பணியமர்த்த வேண்டும், மீதமுள்ள பணியிடங்கள் அம்மாநிலத்திலுள்ள இதர மாவட்டங்களைச் சேர்ந்த பணியாளர்களைக் கொண்டு நிரப்பப் பட வேண்டும்.
  • இந்த மசோதாவின்படி, இந்த ஒதுக்கீடானது தொடக்கத்தில் 10 ஆண்டுகளுக்குப் பொருந்தும்.
  • இந்த மசோதாவானது அம்மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள், சமுதாயங்கள், அறக்கட்டளைகள் மற்றும் பங்காளர் நிறுவனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
  • இது தகுதியான நபர்கள் கிடைக்கவில்லை எனில், தகுதியுள்ள உள்ளூர் பணியாளர்களுக்குப் பயிற்சியினை அளிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்