TNPSC Thervupettagam

தனியார் முதலீட்டுப் பங்குதார நிறுவனம் மற்றும் துணிகர முதலீட்டு நிறுவனம்

July 5 , 2023 382 days 278 0
  • தனியார் முதலீட்டுப் பங்குதார நிறுவனம் மற்றும் துணிகர முதலீட்டு நிறுவனங்கள் 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் தமிழ்நாட்டினைச் சேர்ந்த நிறுவனங்களில் 18 ஒப்பந்தங்களில் 400 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளன.
  • கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் இந்த முதலீட்டு மதிப்பானது 35.69% குறைந்துள்ளது.
  • இந்த நிறுவனங்கள் ஆனது, 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 21 ஒப்பந்தங்களில் 622 மில்லியன் டாலர் முதலீடு செய்தன.
  • இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்த முதலீடுகள் 64.61% குறைந்துள்ளன.
  • 2023 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையில், இந்த நிறுவனங்கள் 34 ஒப்பந்தங்களில் 701 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளன.
  • கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 47 ஒப்பந்தங்களில் சுமார் 1,981 மில்லியன் டாலர் முதலீடு செய்யப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்