TNPSC Thervupettagam

தனுஷ் ஏவுகணை சோதனை

February 24 , 2018 2468 days 811 0
  • வங்கக் கடலில் ஒடிஸா கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய கடற்படை கப்பலிலிருந்து, அணு ஆயுதங்களை சுமந்து செல்லக் கூடிய, 350 கி.மீட்டர் இலக்கு வரம்புடைய கண்டங்களுக்கிடையேயான தனுஷ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் அனைத்து அணு ஆயுதங்கள் மற்றும் அவற்றோடு தொடர்புடைய விநியோகிப்பு அமைப்புகளை கட்டுப்படுத்துகின்ற இந்திய கடற்படையின் பாதுகாப்பு படைப்பிரிவு (Strategic Force Command -SFC) இந்த சோதனையை நடத்தியுள்ளது.
  • தனுஷ் ஏவுகணையானது பிரித்வி-III ஏவுகணை எனவும் அழைக்கப்படுகின்றது.
  • உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குறு தூர, கண்டங்களுக்கிடையேயான (SRBM-Short Range Ballistic Missile) பிரித்வி-II ஏவுகணையின் கடற்படைக்கான மாறுபாட்டு வடிவமைப்பே (Naval Variant) தனுஷ் ஏவுகணையாகும் .
  • வழக்கமான ஆயுதங்கள் (Conventional weapons) மற்றும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய தனுஷ் ஏவுகணையானது ஓர் குறு தூர, கண்டங்களுக்கிடையேயான ஏவுகணையாகும்.
  • ஒருங்கிணைந்த வழிகாட்டு ஏவுகணை தயாரிப்புத் திட்டத்தின் (Integrated Guided Missile Development Programme -IGMDP) ஒரு பகுதியாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தினால் (DRDO – Defence Research and Development Organisation) தயாரிக்கப்பட்டு வரும் 5 ஏவுகணைகளுள் தனுஷ் ஏவுகணையும் ஒன்றாகும்.
  • IGMDP கீழ் தயாரிக்கப்பட்டுள்ள பிற ஏவுகணை வரிசைகளாவன.
    • அக்னி ஏவுகணை வரிசை
    • திரிசூல் ஏவுகணை வரிசை
    • ஆகாஷ் ஏவுகணை வரிசை
    • நாக் (Nag) ஏவுகணை வரிசை

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்