TNPSC Thervupettagam

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வரும் வெளிநாட்டு நிதியை மறுத்தல் அல்லது ரத்து செய்தல்

November 17 , 2024 8 days 59 0
  • வளர்ச்சி மேம்பாட்டிற்கு எதிரான செயல்பாடுகள் மற்றும் கட்டாய மத மாற்றங்களில் எந்தவொரு தன்னார்வத் தொண்டு நிறுவனமும் ஈடுபட்டாலும், 2010 ஆம் ஆண்டு வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தின் (FCRA) கீழ் அவற்றின் பதிவு ரத்து செய்யப்படும்.
  • அரசு சாராத அமைப்பிற்கான (NGO - தன்னார்வத் தொண்டு நிறுவனம்) வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டப் பதிவை மறுக்க அல்லது ரத்து செய்வதற்கான 17 காரணங்களை உள்துறை அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது.
  • சமூக அல்லது மத நல்லிணக்கத்தைப் பாதிக்கக் கூடிய வகையிலான வெளிநாட்டு நிதியுதவியை ஏற்றுக் கொள்ளும் எந்தவொரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் FCRA பதிவும் ரத்து செய்யப்பட வேண்டும்.
  • தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்களின் படி, எந்தவொரு வெளிநாட்டு நிதியையும் அதன் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தாமல் இருந்தாலும் கூட அவற்றின் FCRA பதிவு ரத்து செய்யப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்