TNPSC Thervupettagam

தன்னிச்சையாக பறக்கும் வான்வழி வாகனத் தொழில்நுட்பத்தின் செயல் விளக்கம்

July 9 , 2022 874 days 476 0
  • பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பானது ஒரு புதிய ஆளில்லா வான்வழி வாகனத்தின் முதல் சோதனைப் பயணத்தை மேற்கொண்டது.
  • இது ஒரு தன்னிச்சையாக பறக்கும் வான்வழி வாகனத் தொழில்நுட்பத்தின் செயல் விளக்கமாகும்.
  • இது 'ரேடாருக்குப் புலப்படாத வகையில் பறக்கும் தொழில்நுட்பத்தின் சோதனைத் தளம்' (SWiFT) என்றும் அழைக்கப்படும் செயல்விளக்கச் சோதனை ஆகும்.
  • இது ஓர் ஆளில்லாப் போர் விமானம் (UCAV) அல்லது பறக்கும் இறக்கை வகையிலான போர் முறைக்கான ஆளில்லா விமானம் ஆகும்.
  • இந்த ஆளில்லாப் போர் விமானம் ஆனது ஏவுகணைகள் மற்றும் துல்லியமாக வழி காட்டும் ஆயுதங்களை ஏவக் கூடிய திறன் கொண்டதாக இருக்கும்.
  • இதன் செயற்கூறுகள் பின்வருமாறு
    • நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டப் பகுதியினை வரைபடமிடுதல்
    • பாதிக்கப்பட்டப் பயிர்ச் சேதங்களின் மதிப்பீடு
    • பெரிய அளவிலான பகுதிகளை வரைபடமிடுதல் சேவைகள்
    • போக்குவரத்துக் கண்காணிப்பு மற்றும் மேலாண்மை
    • தளவாடங்கள் வழங்கீடு

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்