தன்பாலின திருமணத்தினைச் சட்டப்பூர்வமாக்குவதற்கு மறுத்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை (சுப்ரியோ எதிர் இந்திய ஒன்றியம்) மறு பரிசீலனை செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
முன்னதாக, உச்ச நீதிமன்றம் பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பில் தன்பாலினத் தம்பதிகள் திருமணம் செய்து கொள்வதற்காக நிபந்தனையற்ற உரிமையைக் கோர முடியாது என்று கூறியது.
இந்த விவகாரம் மீதான சட்டம் இயற்றும் பொறுப்பை நாடாளுமன்றத்திடம் உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தது.
அரசியலமைப்பு சட்டமானது, திருமணத்தினை அடிப்படை உரிமையாக அங்கீகரிக்க வில்லை என்றும் அது தீர்ப்பளித்தது.
ஆனால் தன்பாலினத் திருமணங்களைத் தவிர்ப்பதற்கு 1954 ஆம் ஆண்டின் சிறப்பு திருமணச் சட்டம் ஆனது அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என்றும் அமர்வில் உள்ள ஐந்து நீதிபதிகளும் ஒப்புக்கொண்டனர்.
1954 ஆம் ஆண்டின் சிறப்பு திருமணச் சட்டம் ஆனது, தனது தனிப்பட்ட சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ள முடியாத தம்பதிகளுக்கு மட்டுமே உரிமையியல் திருமண விதிகளை வழங்குகிறது.