TNPSC Thervupettagam

தன்பாலின திருமணம் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

October 27 , 2023 268 days 273 0
  • இந்தியாவில் தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்தை சட்டப் பூர்வமாக்க முடியாது என்று  உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசமைப்பு அமர்வு ஒரு மனதாக தீர்ப்பளித்துள்ளது.
  • இப்பிரச்சனை தொடர்பாக முடிவெடுக்கும் உரிமையானது நாடாளுமன்றத்திற்கே உள்ளதென உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
  • மேலும் 1954 ஆம் ஆண்டு சிறப்புத் திருமணச் சட்டத்தின் (SMA) சட்ட விதிகளை ரத்து செய்யவோ அல்லது அதன் வார்த்தைகளை வித்தியாசமாகப் பொருள் கொள்ளவோ இயலாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
  • SMA சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாலின-நடுநிலைமை விளக்கத்தினை அறிவதே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் ஒரு முக்கிய மையமாக இருந்தது.
  • இது சாதியிடை மற்றும் மதங்களுக்கு இடையேயான திருமணங்களை எளிதாக்கவும் ஊக்குவிக்கவும்  வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு மதச்சார்பற்றச் சட்டமாகும்.
  • தன்பாலினத் திருமணங்களையும் இந்தச் சட்டத்தில் சேர்ப்பதற்காக SMA சட்டத்தின் விரிவான விளக்கத்தை மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
  • தற்போது ஐந்து நீதிபதிகளும், திருமணம் செய்து கொள்வது இந்தியாவில் அடிப்படை உரிமை அல்ல என்று கூறியுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்