TNPSC Thervupettagam

தபஸ் ஆளில்லா வான்வழி வாகனம்

June 23 , 2023 523 days 293 0
  • தபஸ் 201 ஆளில்லா வான்வழி வாகனமானது, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் இந்தியக் கடற்படை ஆகியவை ஆளில்லா வான்வழி வாகனத்தின் இயக்க மற்றும் கட்டுப்பாட்டு திறன்களை தொலைதூரத்தில் அமைந்த ஒரு நிலக் கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து INS சுபத்ரா கப்பலுக்கு மாற்றுவதை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளன.
  • இந்த ஆளில்லா வான்வழி வாகனம் (UAV) என்பது சுமார் 20,000 அடி (ASML) உயரத்தில் தடையின்றிப் பறக்கும் திறன் கொண்டதாகும்.
  • தபாஸ் 201 நடுத்தர உயர வரம்புடைய நீண்ட நேரம் இயங்கும் திறன் (MALE) கொண்ட இந்த ஆளில்லா வான்வழி வாகனம் உள்நாட்டிலேயே உருவாக்கப் பட்டது.
  • உளவுத்துறை, கண்காணிப்பு மற்றும் ஆய்வுப் பணி ஆகிய பலவேறு பணிகளை மேற் கொள்வதற்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.
  • இது இஸ்ரேலிய ஹெரான் ஆளில்லா வான்வழி வாகனத்தின் அதே ரகத்துடன் ஒப்பிடத் தக்கது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்