TNPSC Thervupettagam

தபால் அலுவலகச் சட்டம் 2023

June 24 , 2024 24 days 175 0
  • 2023 ஆம் ஆண்டு தபால் அலுவலக மசோதாவானது, 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதியன்று மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, டிசம்பர் 04 ஆம் தேதியன்று நிறைவேற்றப்பட்டது.
  • குடிமக்களை மையப்படுத்தியச் சேவைகள், வங்கிச் சேவைகள் மற்றும் அரசின் திட்டங்களின் பலன்களை தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு வழங்கச் செய்வதற்கான ஒரு எளிய வகை சட்டக் கட்டமைப்பை உருவாக்குவதை இந்தச் சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தச் சட்டம் ஆனது, முதன்முறையாக, தனியார் விரைவு அஞ்சல் சேவைகளை அதன் வரம்பிற்குள் கொண்டு வருவதன் மூலம் அவற்றினை ஒழுங்குபடுத்துகிறது.
  • இந்தச் சட்டமானது 1898 ஆம் ஆண்டு இந்தியத் தபால் அலுவலகச் சட்டத்தினை மாற்றி அமைக்கிறது.
  • இந்தச் சட்டத்தின் 9வது பிரிவானது, ஒரு மாநிலத்தின் பாதுகாப்பு நலன் கருதி, ஒரு அறிவிப்பின் மூலம், எந்தவொரு பொருளையும் "இடைமறித்து, திறக்க அல்லது தடுத்து வைக்க" எந்த ஒரு அதிகாரிக்கும் அதிகாரம் அளிக்க மத்திய அரசுக்கு அனுமதி அளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்