தமிழகத்தின் உச்சகட்ட மின் தேவை
September 26 , 2023
427 days
269
- தமிழகத்தின் மாலை நேர உச்சகட்ட மின் தேவையானது அக்டோபர் மாதத்தில் 16,200 மெகாவாட்டாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
- இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் 15,217 மெகாவாட்டாக இருந்தது.
- உச்சகட்ட தேவை நேரங்களில் கிடைக்கப் பெறும் மின்சாரத்தின் அளவு அக்டோபர் மாதத்தில் 14,463 மெகாவாட்டாக இருக்கும்.
- அக்டோபர் மாதத்திற்கான ஒட்டு மொத்த எரிசக்தித் தேவை 10,550 மில்லியன் அலகுகளாகவும், 10,788 மில்லியன் அலகுகளாகவும் இருக்கும்.
- மத்திய மின்சார ஆணையத்தின் படி, 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மாநிலத்தின் எரிசக்தித் தேவை 8,820 மில்லியன் அலகாக இருந்தது.
- தென் மாநிலங்களிலேயே தமிழகம் தான் அதிக எரிசக்தி நுகர்வைக் கொண்டுள்ளது.
- தமிழகத்தில் ஏப்ரல் 20 ஆம் தேதியன்று 19,387 மெகாவாட் என்ற எப்போதும் இல்லாத உச்ச கட்டத் தேவைப் பதிவானது.
- அதே நாளில் எப்போதும் இல்லாத அளவுக்கு 423.785 மில்லியன் அலகு என்ற அளவில் தினசரி நுகர்வு பதிவானது.
Post Views:
269